பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேறும்: கிருஷ்ணசாமி!
சனி, 24 மே 2008 (10:34 IST)
''பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேறும்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008-09 மத்திய பட்ஜெட்டில் 4 கோடி விவசாயிகள் பயன்பெடும் பொருட்டு 60 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் ரத்து மேலும் இன்று மத்திய அரசு 11 ஆயிரத்து 680 கோடிக்கு விவசாய கடன்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் கடல் நீரை குடிநீராக்க திட்டமிட்ட ரூ.1,000 கோடியில் ரூ.300 கோடி ஒதுக்கியது, பணவீக்கத்தை குறைக்க அண்மையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மருத்துவ கல்லூரி படிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு கோட்டாவில் ஒதுக்கீடு வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது ஆதிதிராவிட பழங்குடி மாணவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் பெற்றுத்தருவதில் முழு முயற்சியாக இருக்கிறார்கள். நிச்சயம் இம்மசோதா நாடாளுமன்றத்தில் வெகுவிரைவில் நிறைவேறும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.