கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கள்ளச் சாராய வியாபாரிகளை பிடிக்க காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கிருஷ்ணகிரி, தளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 145 கள்ளச்சாராய வியாபாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 77 பேர் ஆண்கள், 68 பேர் பெண்கள். மேலும் 15 சாராய வியாபாரிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.