மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி 17-வது ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் சட்டமன்ற உறுப்பினர் யசோதா தலைமையில் அனைத்து மத பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சைதாப்பேட்டை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ராஜீவ்காந்தி நினைவு ஜோதி ஸ்ரீபெரும்புதூருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், முனியப்பா, குமரிஅனந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கபாலு, ஆரூண், சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
நினைவிடத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.