அந்தியூ‌ரி‌ல் ரூ.10 லட்சம் எள் ஏலத்தில் விற்பனை!

செவ்வாய், 20 மே 2008 (11:24 IST)
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.10 லட்சம் எள் ஏலத்தில் விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய பொருட்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இங்கு தேங்காய், வாழை மற்றும் எள் உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காய் பருப்பு அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.3,618 க்கு ஏலம் போனது. இப்பகுதியில் இருந்து 200 மூட்டை எள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. எள் குவிண்டால் ஒன்று ரூ.6,900 க்கு ஏலம்போனது. இதேபோல் மக்காசோளம் விற்பனையும் சூடாக நடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்