கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடினர்.
நேற்று இரவு சுமார் 10.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு பதிவாகியுள்ளது என்ற விவரம் தெரியவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜோதி நிர்மலா கூறியுள்ளதோடு, மக்கள் அஞ்சவேண்டாம் என்றும் அமைதி காத்திடல் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஒற்றையால்விளை, லீபுரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், மீண்டும் வீடுகளுக்குச் செல்ல பயந்து வீதிகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர்.