தொலைபே‌சி ஒ‌ட்டுகே‌ட்பு: முத‌ல்வ‌ரிட‌ம் இடை‌க்கால அ‌றி‌க்கை தா‌க்க‌ல்!

செவ்வாய், 20 மே 2008 (09:09 IST)
தொலைபேசி ஒட்டுக் கேட்பு ‌நிக‌ழ்வை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சண்முகம் ஆணைய‌ம் இடைக்கால அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் நே‌ற்று தாக்கல் செய்தது.

தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயா ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் பத்திரிகையில் வெளியானதை தொட‌ர்‌ந்து பெரு‌ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது கு‌றி‌த்து ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ி.ு.க தோழமைக் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சியினரும் வ‌லியுறு‌த்‌தின‌ர். இதைத் தொடர்ந்து, தொலைபே‌சி ஓ‌ட்டுகே‌ட்பு ப‌ற்‌றி விசாரிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணைய‌ம் அமைக்கப்பட்டது.

இ‌ந்த ஆணைய‌த்‌தி‌ன் ‌நீ‌திப‌தி ச‌ண்முக‌ம் கட‌ந்த 14ஆ‌ம் தே‌தி உபாத்யாயா, எல்.கே.திரிபாதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

தன்னுடன் தொலைபேசியில் பேசுகிறவர்களின் பேச்சுகளை "லேப்-டாப்'பில் பதிவு செய்வது வழக்கம் என விசாரணையின்போது உபாத்யாயா தெரிவித்தார்.

இந்த நிலையில், விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியிடம் நே‌ற்று ‌நீ‌திப‌தி ச‌ண்முக‌ம் தாக்கல் செய்தார்.

இது கு‌றி‌த்து ‌நீ‌திப‌தி ச‌ண்முக‌ம் கூறுகை‌யி‌ல், இடைக்கால அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளோம். முழு அறிக்கை 3 மாதத்துக்குள் அளிக்கப்படும்' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்