கு‌ண்ட‌ர் ச‌ட்ட‌ம் அவ‌சிய‌ம்: திருமாவளவன்!

சனி, 17 மே 2008 (17:28 IST)
''மக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள குண்டர் சட்டம் அவசியம், அதை வரவேற்கிறோம்'' என தொ‌ல். திருமாவளவன் கூ‌றினா‌ர்.

நெய்வேலி‌யி‌ல் ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமைப் பொறுத்தவரை ஆங்காங்கே சில இடங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்தாலும் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தீண்டாமையை எதிர்த்து உத்தப்புரத்தில் சுவர் இடிக்கப்பட்டது தலித் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியது.

மக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள குண்டர் சட்டம் அவசியம், அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்த குண்டர் சட்டம் அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தி விடக்கூடாது என்பதை அரசு கவனித்து செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் 2 ஆண்டு செயல்பாடு குறித்து ராமதாஸ் தெரிவித்த கருத்துகளுக்கு தான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் மே 29ஆம் தேதி நடத்தவிருந்த தலித் கிறிஸ்தவர் அரசியல் எழுச்சி மாநாடு ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு‌ள்ளது எ‌ன்று திருமாவளவன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்