அண்ணாவிடம் பாஸ் மார்க் வாங்கியவன்: ராமதாஸ் சொல்வதால் வருத்தமில்லை: கருணாநிதி பதில்!
வெள்ளி, 16 மே 2008 (10:09 IST)
பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோரிடம் நான் பாஸ்மார்க் வாங்கியவன், அதனால் மருத்துவர் ராமதாஸ் கூறுவதில் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
இரண்டு ஆண்டு கால ஆட்சியில் தி.மு.க. ஆட்சி தேர்ச்சி ஆக வில்லை என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாற்றி இருந்தார். இந்த கருத்துக்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்த பதிலில், நான் ஏற்கனவே எல்லா பாடங்களிலும் பொதுவான அரசியல், சமுதாய தேர்வுகளில் தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும், ஏன்? பெருந்தலைவர் காமராஜரிடமும் கூட பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன். மருத்துவர் ராமதாஸ் எனக்கு பெயில் மார்க் போடுவதால் ஒன்றும் குறைந்து விடாது.
நான் எஸ்.எஸ்.எல்.சி.யிலேயே பெயில் ஆனவன். அதனால்தான் இயக்கத்திலும், பொதுவாழ்விலும் ஈடுபட்டு முதலமைச்சராகவே ஆகியிருக்கிறேன். மருத்துவர் ராமதாஸ் சொல்வதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. அதை ஒரு கிரெடிட்டாகவே கருதுகிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.