இயக்குனர் சங்கத் தேர்தலையொட்டி இன்று ஏற்பட்ட கோஷ்டி மோதலால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆர்.கே. செல்வமணியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
வடபழனி குமரன் காலனியில் இயக்குனர் சங்க அலுவலகம் இயங்கி வருகிறது. இயக்குனர் சங்கத்தின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று இயக்குனர் சங்கத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தலைவர் பதவிக்கு பாரதிராஜா, ஆர்.சி.சக்தி, முரளி, ஜாக்கிராஜ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். துணைத் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பி.வாசு ஆகியோர் போட்டியிட்டனர். கவுரவ செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வ மணி, அமீர்ஜான், எழில், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இன்று காலை 9 மணிக்கு வடபழனியில் உள்ள ஜே.எஸ். திருமண மண்டபத்தில் சங்கத்தின் தேர்தல் நடைபெறும் என்றும், மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவடைந்து இன்றிரவு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு தேர்தல் நடைபெறவிருந்த வடபழனி ஜே.எஸ். திருமண மண்டபம் அருகே இயக்குனர் சங்கத்தை சேர்ந்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ஏராளமானோர் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அவர் மர்ம ஆசாமிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் ஜே.எஸ்.திருமண மண்டபத்திற்கு விரைந்தனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இயக்குனர்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், சங்கத்திற்கு சற்றும் சம்பந்தப்படாத ஜே.கே.ரித்தீஷின் ஆட்கள் இயக்குனர்களை மிரட்டு கின்றனர். காவல்துறையினரும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர். தேர்தலில் பாரதிராஜா அணி, ஆர்.சி.சக்தி அணி என்று ஆரோக்கிய மான போட்டி உள்ள நிலையில், உதவி இயக்குனர்களின் பின்புலமாக இருந்து ஜே.கே.ரித்தீஷ் அவர் களை தூண்டி விட்டு அடியாட்களை வைத்து மிரட்டுகிறார் என்றார்.
இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், சங்க தேர்தலில் ரவுடிகள் தலையிடுவதா? காவல்துறையினர் துணையுடன் இது நடை பெற்றிருப்பது கொடுமையாக இருக்கிறது. நடந்த சம்பவம் பற்றி உயர் காவல் துறை அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளோம். தற் போதைக்கு தேர்தல் நிறுத்தப் பட்டுள்ளது. அடுத்த பொதுக் குழு கூடி என்று தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்வோம். இதனை தேர்தல் பார்வையாளர் அறிவிப்பார். முதலமைச்சரிடம் இது குறித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.