எ‌ரி‌ந்த விடைத்தாள்களுக்கு பரிகாரம் என்ன? தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம்!

சனி, 10 மே 2008 (10:02 IST)
10ஆ‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் போது வேலூரில் எரிந்த 10ஆ‌ம் வகு‌ப்பு விடைத்தாளு‌க்கு எ‌ன்ன ப‌ரிகார‌ம் எ‌ன்பது ப‌ற்‌றி வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் எ‌ன்று தேர்வுத்துறை இயக்குனர் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

10ஆ‌ம் வகு‌ப்பு விடைத்தாள் தீயில் எரிந்தது பற்றி அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தத்திடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்க‌த்த‌ி‌ல், வேலூரில் 10ஆ‌ம் வகு‌ப்பு ‌விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆங்கிலம் 2-வது தாள் மட்டும் 12 ஆயிரத்து 804 இருந்தன. அவை தீவிபத்தில் சிக்கின.

ஆனால் 9 ஆயிரத்து 600 விடைத்தாள்கள் திருத்தும் நிலையில் லேசாக சுற்றிவர கருகி இருந்தன. அவை திருத்தப்பட்டு விட்டன. 2 ஆயிரத்து 342 விடைத்தாள்களில் எழுத்துக்கள் நன்றாக தெரிந்தன. அவையும் திருத்தப்பட்டு விட்டன. தீ விபத்தின்போது தீயை அணைக்க தண்ணீர் பீய்ச்சியபோது 862 விடைத்தாள்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் 300 திருத்தும்படி உள்ளன.

மற்ற விடைத்தாள் மிகவும் எழுத்து தெரியாத நிலையில் அழிந்துள்ளன. அவற்றிற்கு பரிகாரம் செய்து முடிவு வெளியிடப்படும். என்ன பரிகாரம் என்பது பற்றி தேர்வு முடிவு வெளியிடப்படும் அன்று தெரிவிக்கப்படும். மே 31ஆ‌ம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக, முடிந்தவரை விரைவில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறோம் எ‌ன்று வச‌ந்‌தி ‌ஜீவான‌ந்த‌ம் கூ‌றினா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்