ந‌ண்ப‌ர்க‌ள் த‌ந்த ஊ‌க்கமே காரண‌ம்: முத‌லிட‌ம் பெ‌ற்ற மாண‌வி தாரணி!

வெள்ளி, 9 மே 2008 (15:15 IST)
webdunia photoWD
'ந‌ண்ப‌ர்க‌ள் த‌‌ந்த ஊ‌க்கமே காரண‌‌ம்' எ‌ன்று ‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் முத‌லிட‌ம் பெ‌ற்ற மாண‌வி தார‌ணி கூ‌றினா‌ர்.

பிளஸ் 2 தேர்‌வி‌ல் மா‌நில அள‌வி‌ல் முத‌லிட‌ம் பெ‌ற்ற நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஷ் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி தாரணி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், 2005-2006ஆம் ஆண்டு நடந்த 10ஆ‌ம் வ‌கு‌ப்‌பி‌ல் தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தேன்.

அதேபோ‌ல் பிளஸ்2 தேர்விலும் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாக படித்தேன். என‌க்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர், ந‌ண்ப‌‌ர்க‌ள் ந‌ல்ல ஊக்கம் அளித்தனர். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித்தருவதோடு சரி, இதற்கென தனியாக நான் டியூசன் செல்லவில்லை.

செ‌ஸ் விளையாட்டி‌ல் ஆர்வ‌ம் இரு‌ப்பதா‌ல் படிக்கும் நேரம் தவிர ஓய்வு நேரங்களில் மட்டும் செஸ் விளையாடுவேன். மரு‌த்துவ‌ரு‌க்கு படித்து மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன் எ‌ன்றா‌ர் தார‌ணி.

பள்ளிபாளையம் அண்ணாநகரைச் சேர்ந்த தார‌ணி‌யி‌ன் த‌ந்தை ராமலிங்கம் விசைத்தறி அதிபராக உள்ளார். இவரது தம்பி சவுந்தர் 10ஆ‌ம் வகு‌ப்பு தே‌ர்வு எழு‌தியு‌ள்ளா‌ர்.

மாண‌வி தார‌ணி பாட‌ம் வா‌ரியாக பெ‌ற்ற ம‌தி‌‌ப்பெ‌ண் வருமாறு: தமிழ் - 193, ஆங்கிலம் - 190, கணிதம் - 200, இயற்பியல் - 199, வேதியியல் - 200, உயிரியல் - 200

வெப்துனியாவைப் படிக்கவும்