சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் பல அரிய வகை பூச்சிகள் கொண்ட மியூசியம் அமைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று சுற்றுலா, பண்பாட்டு துறை மானிய கோரிக்கையினை தாக்கல் செய்து அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறுகையில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவான வண்டலூரில் ரூ.150 கோடி செலவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் பல அரிய வகை பூச்சிகள் கொண்ட மியூசியம் அமைக்கப்படும். இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் தமிழகத்தில் உள்ள சுற்றுலாக்களில் இதுவும் ஒன்றாகிவிடும்.
இந்த பூங்கா சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் கவரும். அதுமட்டுமின்றி கல்வி, தகவல், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு இந்த பூங்கா சிறந்து விளங்கும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.