மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள உத்தபுரம் கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய சுவர் நேற்றுக் காலை இடிக்கப்பட்டது.
பின்னர் அவர் மக்களிடையில் பேசுகையில், "உத்தபுரம் தடுப்பு சுவர், கடந்த 18 ஆண்டுகளாக இருந்துள்ளது. இது ஒரு அவமான சின்னமாகும். சாதி பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருந்த இந்த சுவர் தற்போது அகற்றப்பட்டு உள்ளது.
நாட்டின் எந்த மூலையில் சாதிய மோதல்கள் நடந்தாலும் உத்தபுரம் சம்பவத்தை எடுத்துச் சொல்லும் அளவுக்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன்.
நாடு சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனைக்குரியது. சமூக, சாதிய கொடுமைகளுக்கு முடிவுகட்ட உத்தபுரம் சம்பவம் சிறந்த உதாரணமாகும். இந்த பிரச்சினையை தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் வெளிக்கொண்டு வந்துள்ளது" என்றார்.