க‌ர்நாடக தே‌ர்த‌ல்: கா‌ங்‌கிர‌சு‌க்கு வா‌க்க‌ளி‌க்க ‌தி.மு.க.‌வினரு‌க்கு கருணா‌நி‌தி உ‌த்தரவு!

புதன், 7 மே 2008 (16:16 IST)
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு அங்குள்ள தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், அங்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு அங்குள்ள திராவிட முன்னேற்ற கழகத்தினரின் ஆதரவினை கோரி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில், கர்நாடக மாநில தி.மு.க. அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் முழு அளவில் ஒத்துழைத்து கழக வாக்குகள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் அங்கே போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் 'கை' சின்னத்தில் அளித்திடுமாறு தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்