முல்லைப் பெரியாறு அணை பலமாக உ‌ள்ளது: துரைமுருகன்!

புதன், 7 மே 2008 (10:51 IST)
''முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்பதை ஆயிரம் மேடைகளில் சத்தியம் செய்து நிரூபிக்கத் தயார்'' என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் தண்டபாணி, அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் சந்திரகாசி, இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌ப்‌பின‌ர் சிவபுண்ணியம் ஆ‌கியோ‌ர், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட கேரளா வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் வருவதாக வெளியிடப்பட்ட செய்திக‌ள் வரு‌கிறதே எ‌ன்று கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து பொது‌ப்ப‌ணி‌த்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகை‌யி‌ல், முல்லைப் பெரியாறு அணையை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம். பொதுமக்கள் பலர் வந்து அதைப் பார்க்கிறார்கள். அவர்களுள் ஒருவராக வந்து அணையை பார்க்கலாம்.

கேரளா மாநில அமை‌ச்ச‌ர்க‌ள், கேரளாவுக்காக ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வாதாடும் வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் மட்டுமல்ல அந்த வழக்கை கேட்கும் நீதிபதிகளே வந்து அணையைப் பார்க்கட்டும், பரவாயில்லை.

நம்மிடத்தில் ஒளிவு மறைவு கிடையாது. அந்த அணை பலமாக இருக்கிறது என்பதை ஆயிரம் மேடைகளில் சத்தியம் செய்து நிரூபிக்க தமிழக அரசு தயாராக உள்ளது எ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்