அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்தி சேவைத் திட்டம்: முத‌‌ல்வ‌ர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

செவ்வாய், 6 மே 2008 (14:43 IST)
த‌‌மிழக சுகாதார மே‌ம்பா‌ட்டு‌‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் அவசர கால ஆ‌ம்புல‌ன்‌ஸ் ஊ‌‌ர்‌‌தி சேவை‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கான பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது.

எம்ரி நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் நோ‌ய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்தி சேவைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உ‌ள்ளது. மருத்துவம், தீ விபத்து மற்றும் காவல்துறை சம்பந்தமான அனைத்து அவசர தேவைகளுக்கும் கட்டணம் இல்லா தொலைபேசி தொடர்பு எண் 108 மூலம் இந்த மையத்தை மக்கள் 24 மணி நேரமும் தொடர்புகொள்ள முடியும்.

இந்த நிறுவனம் அவசரகால ஊர்திகளை முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் தொடங்கி, பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும். ஒவ்வொரு ஊர்தியிலும் அவசரகாலத்தில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற பணியாளரும், ஒரு ஓட்டுநரும் பணியமர்த்தப்படுவார்கள்.

இத்திட்டத்திற்காக ஆலோசனை வழங்க, மாநில அளவில் தலைமைச் செயலரைத் தலைவராகக் கொண்ட ஆலோசனைக் குழுவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வா‌ழ்வுத்துறை சிறப்புச் செயலாளர் மற்றும் தமி‌ழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் பி.டபிள்யூ.சி. டேவிதார், எ‌ம்‌ரி ‌நிறுவன‌த்த‌ி‌ன் முதன்மை நிர்வாக அலுவலர் வ‌ெ‌ங்க‌ட் ஆகியோர் கையொப்பமிட்டனர் எ‌ன்று த‌‌மிழக அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்