இ‌ந்த ஆ‌ண்டு 10 பு‌திய தடு‌ப்பூ‌சி அ‌றிமுக‌ம் : ப‌த்மநாப‌ன்!

திங்கள், 5 மே 2008 (14:34 IST)
''இ‌ந்ஆ‌ண்டி‌லப‌த்ததடு‌ப்பூ‌சி மரு‌ந்தஅ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்படு‌ம்'' எ‌ன்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் ப‌த்மநாப‌ன் கூ‌றினா‌ர்.

திருச்சியில் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் பத்மநாபன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌ல், தற்போது தடுப்பூசிகள் மரு‌த்துவ‌ர்க‌ளமேற்பார்வையில் தான் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மரு‌த்துவமனைக‌ளி‌லகுழந்தைகளுக்கு போடப்படுகிறது. மூளை காய்ச்சலுக்கு ஜப்பான் நாட்டு புதிய தடுப்பூசி உள்பட 10 தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. இ‌ந்ஆ‌ண்டப‌த்தபு‌‌திதடு‌ப்பூ‌சி மரு‌ந்துக‌ளஅ‌றிமுக‌‌ப்படு‌த்த‌ப்படு‌கிறது.

தமிழ்நாட்டில் 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. 365 ஆரம்ப சுகாதார நிலையங்களில் "ஆல்ட்ரா சவுண்ட் கேன்" நவீன கருவி பொருத்தப்படுகிறது. 385 சுகாதார நிலையங்களில் ரத்த பரிசோதனை கருவி வழங்கப்பட்டு, பிரசவத்தின் போது ரத்த அழுத்தம் துல்லியமாக கணக்கிடப்படுகிறது. தற்போது 114 புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் வரும்முன் காப்போம் திட்டத்தின்படி 62 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 2 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இர‌‌ண்டரலட்சம் பேர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

உணவு பழக்கம் மாற்றத்தால் தான், சர்க்கரை நோய் அதிகமாகிறது என்று மரு‌த்துவ‌ர்க‌ள் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே சர்க்கரை நோய் குறைய உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் தேவை.

கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதற்காக திருச்சி மாவட்டத்தில் 4 நடமாடும் மரு‌த்துவமனசெயல்படுகிறது. இந்த நடமாடும் மரு‌த்துவமனையில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, உதவியாளர் ஒருவர் இருப்பார்கள். இன்னும் 10 வட்டாரத்தில் நடமாடும் மரு‌த்துவமனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது எ‌ன்றப‌த்மநாப‌னகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்