கோடை காலத்தின் உச்ச கட்டமாக கருதப்படுவது கத்திரி வெயில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்துகிறது.
சென்னையில் கடுமையான வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது.
சென்னை, வேலூர், திருச்சி ஆகிய நகரங்களில் நேற்று வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.08, வேலூர் 106.8, திருச்சி, புதுச்சேரி 104, சேலம் 99, கோவை 96.08 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
சென்னையில் இன்று காலையிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. வெளியில் சென்றால் உடல் முழுவதும் அனல் கொதிக்கிறது. மக்கள் வெளியே செல்ல முடியவில்லை அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கிறது.
இந்த நிலையில் கோடை காலத்தின் உச்ச கட்டமாக கருதப்படுவது கத்திரி வெயில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28ஆம் தேதி வரை இந்த அக்னி நட்சத்திரம் நீக்கும்.