காட்டாமணக்கு விதை சாப்பிட்ட 13 பள்ளி குழந்தைகள் மயக்கம்!
வெள்ளி, 2 மே 2008 (11:21 IST)
கடவூர் அருகே காட்டா மணக்கு விதை சாப்பிட்ட 13 பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் கிழக்கு அய்யம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 1, 2ஆம் வகுப்பு படிக்கும் 13 மாணவ- மாணவிகள் பள்ளி அருகில் உள்ள காட்டாமணக்கு செடியின் விதைகளை பறித்து சாப்பிட்டுள்ளனர்.
விதையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்கு பின் மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.