புகை‌ப்ப‌ட‌த்துட‌ன் வா‌க்காள‌ர் ப‌ட்டிய‌‌ல் 98 ‌விழு‌க்காடு ‌நிறைவு: நரேஷ்குப்தா!

புதன், 30 ஏப்ரல் 2008 (10:45 IST)
'தமிழகத்தில் புகை‌ப்பட‌த்துட‌ன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 98.6 ‌விழு‌க்காடு நிறைவடைந்துள்ளது' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.

திரு‌ச்‌சி‌யி‌லநே‌ற்றதமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கஅ‌‌ளி‌த்பே‌ட்டி‌யி‌‌ல், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்ட‌ப்பேரவதொகுதியிலும் புகை‌ப்பட‌த்துட‌னகூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் தாலுகா அலுவலகமும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலகமும் அடையாள அட்டை வழங்கும் மையமாக செயல்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அடுத்த மாதம் 2-வது வாரம் முதல் புகை‌ப்பட‌த்துட‌னகூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் மையங்கள் செயல்படத் தொடங்கும். இந்த மையங்கள் ஆண்டு முழுவதும் அலுவலக வேலைநாட்களில் செயல்படும்.

அடுத்த கட்டமாக இந்த மையங்கள் `வெப் பேஜ்' மூலமாக இணைக்கப்பட உள்ளன. வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், முகவரி, போட்டோ ஆகியவற்றில் தவறுகள் இருந்தால் இந்த மையத்தில் விண்ணப்பித்து மாற்று அடையாள அட்டைகளை பெறலாம். விண்ணப்பித்த ஒரு வாரத்தில் இருந்து அதிகபட்சமாக ஒருமாதத்திற்குள் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் புகை‌ப்பட‌த்துட‌ன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 98.6 ‌விழு‌க்காடநிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் 96 ‌விழு‌க்காடவாக்காளர்களுக்கு புகை‌ப்பட‌த்துட‌ன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1.6 ‌விழு‌க்காடு அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ளன எ‌ன்றநரே‌ஷகு‌ப்தகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்