மே 2ஆ‌ம் தேதி முழு அடை‌ப்‌பி‌ல் பங்கேற்க மாட்டோம்: வெள்ளையன்!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (09:59 IST)
''த‌மிழக‌த்‌தி‌ல் மே 2ஆ‌ம் தேதி நடைபெற இருக்கும் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்'' என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறினார்.

செ‌ன்னை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், வணிகர் தின வெள்ளிவிழாவையொட்டி மே 5ஆ‌ம் தேதி சென்னை தீவுத்திடலில் வணிகர் சங்க மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாடாக நடத்தப்படும். இதனால் தமிழகம் முழுவதும் மே 5ஆ‌ம் தேதி கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருக்கும்.

மாநா‌‌ட்டி‌ல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.இ.அ.தி.மு.க. சார்பில் பி.எச்.பாண்டியன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொ‌ள்‌கி‌‌ன்றன‌ர்.

மே 2ஆ‌ம் தேதி நடக்கும் கடையடைப்பு போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம். ஆனால் கடைகளை அடைத்து ஆதரவு கொடுக்க முடியாது. அன்றைய தினம் எல்லா கடைகளும் திறந்து இருக்கும். மாநாட்டுக்காக 5ஆ‌ம் தேதி கடையடைப்பு நடத்த இருப்பதால் நாங்கள் இந்த போராட்டத்தில் பங்கு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். இதை நாங்கள் தெரியப்படுத்தியிருக்கிறோம் எ‌ன்று வெ‌ள்ளைய‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்