நா‌ன் எ‌ந்த எ‌ஸ்‌டே‌ட்டையு‌ம் வா‌ங்க‌வி‌ல்லை: கருணா‌நி‌தி!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (17:54 IST)
என்னைப் பொறுத்தவரை நான் முதல்வராக வருவதற்கு முன்பு எந்த வீட்டில் வாழ்ந்தேனோ, அதே வீட்டில் தான் இன்றளவும் வசிக்கிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கே‌ள்‌வி- ப‌தி‌ல் அ‌‌றி‌க்கை‌:

தமிழ்நாட்டில் "மினி எமர்ஜன்சி'' ஆட்சி நடைபெறு வதாக ம.தி.மு.க. தலைவர் வைகோ சொல்லியிருக்கிறாரே?

ஆமாம், "பொடா'' சட்டத்தைக் கொண்டுவந்து - அவரை வெளியே வரவிடாமல் சிறையிலே அடைத்து வைக்கப்பட்டுள்ளது அல்லவா! காவல் துறையினர் கைது செய்து வைத்திருப்பவரைக் கூட, இவர் இப்போது நேரிலே சென்று பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அல்லவா! அதனால் "மினி எமர்ஜன்சி'' ஆட்சி என்று சொல்லத் தான் செய்வார். இது இருக்கட்டும், சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையிலே பிரதமருக்கு நான் கடிதம் எழுதியதை நிரூபித்தால் என்று சவால் விட்டாரே, நான் ஒன்றுக்கு இரண்டு கடிதங்களை எடுத்துக் காட் டினேனே, அதற்கு என்ன பதில் என்று முதலில் சொல்லச் சொல்லுங்கள். பிறகு மெகா எமர்ஜன்சி, மினி எமர்ஜன்சி பற்றி யெல்லாம் பேசலாம்!

பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம் கேட்ட கேள்விக்கு எதிர்க்கட்சி கொறடா செங்கோட்டையன் உங்களை கடுமையாக தாக்கி அறிக்கை விடுத்துள்ளாரே?

சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் கோவைத் தங்கம் பேசும்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எடுத்துப் பேசி கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்கள் எந்த அளவிற்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.

அவரது கேள்விக்கு அவையிலோ - அறிக்கையிலோ விளக்கமளிக்க வேண்டிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த செங்கோட்டையன் என்னைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்திருக்கிறார். அவருக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அ.இ.அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் உள்ள செங்கோட்டையனைக் கைது செய்தால் உள்ளாட்சி தேர்தலில் அ.இ.அ.ி.ு.க வேட்பாளர்களுக்கான தேர்தல் பணி பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினார்.

அதன் பின்னர் அந்த வழக்குகள் எல்லாம் அவர்களது ஆட்சிக் காலத்தில் முறையாக நடைபெறாமல் தீர்ப்புகள் வேறு விதமாக வந்தன என்ற போதிலும், உயர் நீதிமன்ற நீதிபதி சிவப்பா அவர்களின் பாராட்டினை இந்த அளவிற்குப் பெற்றவர் தான் இன்றையதினம் நான் ஏதோ எஸ்டேட் வாங்கியிருப்பதைப் போல அறிக்கை விடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை நான் முதல்வராக வருவதற்கு முன்பு எந்த வீட்டில் வாழ்ந்தேனோ, அதே வீட்டில் தான் இன்றளவும் வசிக்கிறேன். எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்