தரமணியில் ரூ.3000 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலம்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (17:05 IST)
தரம‌ணி‌யி‌ல் ரூ.3,000 கோடி‌யி‌ல் ‌சிற‌ப்பு பொருளாதா ம‌ண்டல‌ம் உருவா‌க்க‌ப்படு‌கிறது. இத‌ற்கான ஒ‌ப்ப‌ந்த‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌‌ல் இ‌ன்று ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானது.

இது கு‌றி‌த்து தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சென்னதரமணியில் 25.27 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) டாட்டா ரியாலிட்டி மற்றும் இன்ப்ராஸ்டிரக்சர் லிமிடெட் (டி.ஆர்.ஐ.எல்.), இந்தியன் ஓட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கூட்டுத் துறையில் ரூ.3,000 கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றினை உருவாக்குகிறது.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத்துறை ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ்.ராமசுந்தரம், டாடா சன்ஸ் நிறுவனத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட டாட்டா ரியாலிட்டி மற்றும் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இந்தியன் ஓட்டல்ஸ் கம்பெனி நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆர்.கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ரூ.3,000 கோடி முதலீட்டில் அமையவுள்ள இந்தப் புதிய தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒருங்கிணைந்த பன்னாட்டு மாநாட்டு மையமும், 5 நட்சத்திர தங்கும் விடுதியும், அடுக்குமாடி குடியிருப்புகளும் அமைக்கப்படும்.

மொத்தம் 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையும் இத்திட்டத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 20 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் நிறைவேற்றப்பட்டு 2009 ஆம் ஆண்டில் செயல் படத் தொடங்கும்.

அதனை தொடர்ந்து 19 லட்சத்து 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு இரண்டாம் கட்ட கட்டுமானப்பணிகள் 2011-ல் நிறைவு பெறும். இந்தத் தகவல் தொழில்நுட்பச் சிறப்பு பொருளாதார மண்டலம் 40,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் எ‌ன்றதெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்