1.5 லட்சம் போலி குடு‌ம்ப அ‌ட்டைக‌ள் கண்டுபிடிப்பு: எ.வ.வேலு!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (16:25 IST)
''த‌மிழக‌த்‌தி‌ல் ஒ‌ன்றரை ல‌ட்ச‌ம் போ‌லி குடு‌ம்ப அ‌ட்டைக‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது'' எ‌ன்று ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று உணவு‌த்துறை அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு கூ‌றினா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று கேள்வி நேரம் முடிந்ததும் கா‌ங்‌கி‌ர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் பீட்டர் அல்போன்ஸ், தமிழகம் முழுவதும் போலி குடு‌ம்ப அ‌ட்டைக‌ள் கார்டுகள் பரவலாக உள்ளது. இதை எப்படி கண்டு பிடிப்பீர்கள்? போலி அ‌ட்டைக‌ளை தடுக்க பெரு விரல் ரேகையை அடை யாளமாக பதிய வைத்து கொடுக்க முடியுமா? எ‌ன்று எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

இதற்கு பதில் அளித்து உணவு துறை அமைச்சர் வேலு கூறுகை‌யி‌ல், தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் ஒரே எண்ணில் பல அட்டைகள் இருப்பதும், ஒரே குடும்பத்தில் 4, 5 அட்டைகள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை வைத்து பட்டியலிடும் போது 34 லட்சத்து 51 ஆயிரத்து 312 அ‌ட்டைக‌ள் போலி அ‌ட்டைக‌ள் என்று தெரிய வந்தது.

11-4-2008 வரை 30 லட்சத்து 5 ஆயிரத்து 217 வீடுகளில் சோதனை செய்ததில் 69 ஆயிரத்து 770 போலி அ‌ட்டைகளை கண்டு பிடித்து நீக்கினோம். கடைகளில் நடந்த விசாரணையில் 96 ஆயிரத்து 520 அட்டைகள் போலி என்று கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 290 குடும்ப அட்டைகள் போலி என்று கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு எல்லோருக்கும் புதிய குடு‌ம்ப அ‌ட்டைக‌ள் கொடுக்க வேண்டிய பணியும் உள்ளது. எனவே இதில் போலியான அ‌ட்டைக‌ள் வராத அளவுக்கு கைரேகைகளை பதிய வைக்க செய்யலாமா அல்லது இன்னும் அதைவிட புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி புதிய அ‌ட்டைகளை வழங்கலாமா என்று முடிவு செய்யப்படும். போலி அட்டைகளை வழங்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது எ‌ன்று அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்