வ‌ங்க‌க்கட‌லி‌ல் கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ம‌ண்டல‌ம்!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (13:53 IST)
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 600 கிலோ மீட்டருக்கஅப்பால், வங்கக்கடலில் நே‌ற்று இரவு 11.30 ம‌ணி‌க்கு ஏ‌ற்ப‌ட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதிப்பு ஏதும் ஏற்படப்போவது இல்லை. சில நேரங்களில் குறை‌ந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து போகவும் வாய்ப்புள்ளது எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்தி‌‌‌‌ல் ஆ‌ந்‌திர ‌பிரதேச கடலோர‌ப் பகு‌‌தி‌யி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ற்ற வா‌ய்‌ப்பு‌ள்ளதாக வா‌னிலை ஆ‌ய்வு மைய‌‌ம் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்