16 ஆண்டு முதலீடுகளை மிஞ்சும் வகையில் இ‌ந்தா‌ண்டு புதிய ஒப்பந்தங்கள்: கருணாநிதி!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (10:20 IST)
''இந்த ஆண்டிலேயே கடந்த 16 ஆண்டுகளை விட அதிகமான முதலீடுகளை ஈர்க்கக் கூடிய அளவில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்ய இருக்கிறோம்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மோட்டோரோலா தொழிற்சாலையின் உற்பத்தியகத்தமுதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்து பேசுகை‌யி‌ல், செல்பேசிகளைத் தயாரிப்பதில் உலகில் 2-வது பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஒரு கோடியே 50 லட்சம் தொலைபேசி இணைப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால் டிசம்பர் 2007 இறுதியில், இந்தியா 27 கோடி தொலைபேசி இணைப்புகளைக் கொண்டுள்ளது. இனி வருங்காலங்களில் கூட இத்தகைய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் அதிகமாக உள்ளன.

கிராமப்புற மக்களிடையே தொடர்புகளையும், விழிப்புணர்வுகளையும் கூட செல்பேசிகள் மேம்படுத்திடும். இனி வருங்காலங்களில் விவசாயிகள் பல்வேறு தகவல்களைப் பெறுவதற்கும், அவர்கள் தங்களுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலைகளைப் பெறுவதற்கும் செல்பேசிகள் மிக அதிக அளவில் பயன்படும் என உறுதியாக நம்புகிறேன்.

செயல்முறைக்கு உகந்த எங்களுடைய அணுகுமுறை காரணமாக 500 வளமார் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பல நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளன. உலகப் புகழ்வாய்ந்த தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்காகக் கடந்த 2 ஆண்டுகளில் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டுள்ளன.

இந்த தொழிற்சாலைகளில் 17 ஆயிரத்து 583 கோடி ரூபாய் அளவுக்குத் தொழில் முதலீடுகள் அமையும். இவை ஒரு லட்சத்து 42 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

இந்த 13 தொழில் நிறுவனங்களில் கெப்பாரோ, சாம்சங், சான்மினா, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் இரண்டாம் தொழிற்சாலை, டெல் கணினிகள் ஆகியவற்றுடன் தற்பொழுது தொடங்கப்படும் மோட்டோரோலா தொழிற்சாலையையும் சேர்த்து மொத்தம் 6 தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை தொடங்கி விட்டன.

மேலும் பல தொழிற்சாலைகள் தொடர்ந்து வரவிருக்கின்றன. வருகின்ற மாதங்களில் இந்த 2008-ம் ஆண்டிலேயே, எங்களுடைய அரசு கடந்த 16 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை விட அதிகமான அளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவிருக்கிறது எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்