ம‌க்களவை தொகு‌தியாக ‌மீ‌ண்டு‌‌ம் அ‌றி‌வி‌க்‌க‌க் கோ‌ரி புது‌க்கோ‌ட்டை‌யி‌ல் முழு அடை‌ப்பு!

சனி, 26 ஏப்ரல் 2008 (13:43 IST)
தொகு‌தி மறு‌சீரமை‌ப்‌பி‌ன் போது ‌நீ‌க்க‌ப்ப‌ட்ட புது‌க்கோ‌ட்டை ம‌க்களவை‌த் தொகு‌தியை ‌மீ‌ண்டு‌ம் அ‌றி‌வி‌க்‌க‌‌க் கோ‌ரி அ‌ம்மாவ‌ட்ட‌ம் முழுவது‌ம் இ‌ன்று முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நட‌ந்து வரு‌கிறது!

புதுக்கோட்டை ம‌க்களவை‌த் தொகுதியில் இடம் பெற்றிருந்த புதுக்கோட்டை, குளத்தூர், அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கரூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ம‌க்களவை‌த் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இத‌ற்கு அனைத்து அரசியல் கட்சிகளு‌ம், பொது அமைப்புகளு‌ம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்தன. போராட்டங்களையு‌ம் நடத்தின. இதனையடு‌த்து வர்த்தக சங்கங்களு‌ம், வணிகர்களு‌ம் இணை‌ந்து தொகுதி மீட்புகுழு அமைக்கப்பட்டது.

இ‌க்குழு முதல்கட்டமாக பொதுமக்களிடம் இருந்து 5 ல‌ட்ச‌ம் கையெழுத்து பெற்று குடியரசு‌த் தலைவரு‌க்கு அனுப்பி வை‌த்தது. அதனையடு‌த்து 2-வது கட்டமாக உண்ணாவிரத போராட்டமும் நடத்‌தியது.

3வது கட்டமாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இத‌ற்கு மாவட்ட வர்த்தக சங்கங்கள், தன்னார்வ அமைப்பினர், வக்கீல்கள் சங்கம், ஆட்டோ சங்க‌ம் உள்பட அனைத்து அமைப்புகளும் ஆதரவு தெ‌ரி‌வி‌த்தன.

இதனையடு‌த்து புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் முழுவது‌ம் இ‌ன்று கடைக‌ள் அனை‌த்து‌ம் மூட‌ப்ப‌ட்டு‌ள்ளது. பேரு‌ந்து, கா‌ர், ஆ‌ட்டோ உ‌ள்‌ளி‌ட்ட வாகன‌ங்க‌ள் இய‌க்க‌ப்பட‌வி‌‌ல்லை. இதனா‌ல் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளு‌ம் ஆதரவு தெரிவித்து‌ள்ளன.

காவ‌ல்துறை பாதுகா‌ப்புட‌ன் ர‌யி‌ல்க‌ள் இய‌க்க‌ப்ப‌டுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்