தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கோவிந்தசாமி, தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களை வருவாய்த்துறையிலிருந்து தொழிலாளர் துறைக்கே மாற்ற வலியுறுத்தி தங்கள் கட்சியினர் வெளிநடப்பு செய்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.