தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டுமானபணி ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்து!
புதன், 23 ஏப்ரல் 2008 (16:51 IST)
சென்னை தரமணியில் ரூ.1,500 கோடி முதலீட்டில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டத்தின் கட்டுமானப் பணிகள் அமைப்பதற்கான கூட்டுத்துறை ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று கையெழுத்தானது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் சென்னை தரமணியில் ரூ.1,500 கோடி முதலீட்டில் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டத்தின் கட்டுமானப் பணிகள் அமைப்பதற்கான கூட்டுத்துறை ஒப்பந்தம் தமிழக அரசின் சார்பில் டிட்கோ நிறுவனத்திற்கும், டி.எல்.எப். நிறுவனத்திற்கும் கையெழுத்தானது.
26.64 ஏக்கரில் இந்த தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு இந்த கட்டுமானப் பணிகள் முடிவடைகிறது. இந்த நிறுவனத்தில் 45,000 பேருக்கு நேரடியாகவோ, 10,000 பேருக்கு மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியின் போது, பொதுப்பணிதுறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், தொழில்துறை செயலாளர் எம்.எப்.பரூக்கி, டிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எஸ்.ராமசுந்தரம், டி.எல்.எப். நிறுவனத்தின் தலைவர் கே.பி.சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.