48 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு பணி ஆணை: மு.க. ஸ்டாலின் வழங்கினார்!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (13:44 IST)
சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 48 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கபணி நிரந்தர ஆணையை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இ‌‌ன்று வழங்கினார்.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்னை மாநகராட்சியில் 48 தினக்கூலி தொழில்நுட்ப உதவியாளர்களின் பணிவரன்முறைப்படுத்தப்பட்டு நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மான்யக் கோரிக்கையில் அறிவித்தபடி சென்னை மாநகராட்சியில் தற்போது தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் 2,025 துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பணியிடங்களில் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். மீதமுள்ள 3,485 பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று சென்னை மாநகராட்சியை சேர்ந்த 48 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளை வழங்கினார்கள். இப்பணியாளர்கள் 4500-125-7000 காலமுறை ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

1996ஆம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப்படையில் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்டு, 10ஆண்டு காலமாக பணி ‌நிரந்தரம் செ‌ய்யப்படாமல் இப்பணியாளர்கள் இருந்து வந்தனர். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, பணி நிரந்தரம் செ‌ய்யப்பட்டு சென்னை மாநகராட்சி வார்டுகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளருக்கான பொறுப்புகளை மேற்கொள்ள உள்ளனர் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்