செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மி‌ழ் வழ‌க்கு மொ‌‌‌ழி: கருணா‌நி‌தி ந‌ம்‌பி‌‌‌க்கை!

ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (14:16 IST)
செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லத‌‌மிழவழ‌க்கமொ‌ழியா‌க்‌கி ம‌த்‌‌திஅரசு ‌விரை‌வி‌லஅ‌றி‌வி‌ப்பவெ‌ளி‌யிடு‌மஎ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி ந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ர் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "இந்தக் கோரிக்கை பற்றி நேற்றைய தினம் கூட மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மொழியாக தமிழை ஆக்க வேண்டுமென்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கைக்கு மத்திய அரசு எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காது என்றும் - மத்திய அரசு இந்தப் பிரச்சனையை ஆதரவாகவே அணுகும் என்றும் சொல்லியிருக்கிறார்.

டெல்லியிலே நட‌ந்த ஒரு மாநாட்டில் படிக்கப்பட்ட எனது பேச்சில் இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவூட்டி, நமது சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதின் தொடர்ச்சியாக நட‌ந்த செய்தியாளர்கள் கூட்டத்தில்தான் மத்திய சட்டத்துறை அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

பல மாதங்களாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக இந்தக் கோரிக்கை காத்துக் கொண்டுள்ளது என்பதை நினைவிலே கொண்டு, அமைச்சர் உறுதி அளித்திருப்பதைப் போல விரைவில் நல்லதொரு அறிவிப்பை மத்திய அரசின் சார்பில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்" எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்