அரவாணிகள் நல வாரிய உறுப்பினராக விழுப்புரத்தைச் சேர்ந்த வி.சலீமா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு அரவாணிகளுக்கு தனி நல வாரியம் அமைத்துள்ளது. இதில் எட்டு மாவட்டங்களிலிருந்து தலா ஒரு அரவாணி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வி.சலீமா, மாவட்டஆட்சியர் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக அரவாணிகள் சார்பாக சலீமா நன்றியை தெரிவித்துள்ளார்.