விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நாராயணன் (28), காத்தவராயன் (41), ராமதாஸ் (40), அவரது மனைவி தேவதி (40) ஆகியோர் நெல் மூட்டைகளை ஒரு டிராக்டரில் ஏற்றி புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விற்பனை செய்ய நேற்று இரவு புதுவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
நள்ளிரவு 1 மணி அளவில் மரக்காணம் அடுத்த ஆட்சிக்காடு என்ற இடத்தில் டிராக்டர் வந்த போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி வேகமாக வந்த டீசல் டேங்கர் லாரி, டிராக்டரின் பின்னால் மோதியது.
இதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து நெல் மூட்டைகள் சிதறியது. இடிபாடுகளில் சிக்கி நாராயணன், காத்தவராயன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். ராமதாஸ், அவரது மனைவி தேவகி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தேவகி இன்று காலை இறந்தார்.
இந்த விபத்து குறித்து மரக்காணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் செந்திலை கைது செய்தனர்.