மகாவீர் ஜெயந்தி: நாளை மது‌க் கடைகள் மூடல்!

வியாழன், 17 ஏப்ரல் 2008 (16:24 IST)
மகா‌வீ‌‌ரஜெய‌ந்‌தியை மு‌ன்‌னி‌ட்டு நாளை மது‌க்கடைக‌ள் அனை‌த்து‌ம் மூட‌ப்ப‌ட்டிரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று செ‌ன்னை மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து சென்னை மாவட்ட ஆ‌ட்‌சி‌த்தலைவ‌ர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகள் 1989, விதி 23 (1)-ன்படி நாளை (18ஆ‌ம் தேதி) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது எ‌ன்று அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட் டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்