இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட அலுவலக செய்தி குறிப்பில், ஏப்ரல் 19ஆம் தேதி சித்ரா பவுர்ணமி. இந்த நாளில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் 840 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
இந்த பேருந்துகள் 19ஆம் தேதி இரவு சென்னை, திருக்கோவிலூர், பண்ருட்டி, விழுப்புரம், கடலூர், திண்டிவனம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், கும்பகோணம், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், தாம்பரம், அடையாறு உள்பட பல பகுதிகளில் இருந்து இயக்கப்படும்.
சென்னை- திருவண்ணாமலை வழித்தடத்தில் முன்பதிவு செய்தும் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.