ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் 2,643 பணியிடங்கள் நிரப்பப்படும்: மு.க.ஸ்டாலின்!

வியாழன், 17 ஏப்ரல் 2008 (10:28 IST)
ஊரக வள‌‌ர்‌ச்‌சி, ஊரா‌ட்‌சி‌த் துறை‌யி‌ல் 2,643 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழக சட்ட‌ப் பேரவ‌ை‌யி‌ல் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் ஸ்டாலின் பேசுகை‌யி‌ல், கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி 2 ஆண்டுகளில் 5,034 கிராமங்களுக்கு தலா ரூ.20 லட்சம் என்ற வீதத்தில் ரூ.1119 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 38 ஆயிரத்து 651 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் 90 ‌விழு‌க்காடு நிதியுடன், கடலூர், விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்களில் ஊரக வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்துக்கு 100 நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 1.4.2008 முதல் மாநிலம் முழுவதற்கும் விரிவுபடுத்தப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிகள் விரைவாக நடக்க 800 கணினி உதவியாளர்கள், 385 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 2,643 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, விரைவில் நிரப்பப்படும் எ‌ன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்