ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி: கருணாநிதி!
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (11:13 IST)
''ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் சிங், பிரபுல் படேல் ஆகியோர் ராகுல் காந்தி, பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று சொல்லியிருக்கிறார்களே? என்று முதலமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி என்று பதில் அளித்தார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பிரச்சினையில் கிரீமி லேயர் பற்றி? முதலமைச்சரிடம் பதில் அளிக்கையில், அதுபற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார்.
கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை 18ஆம் தேதி கூட்டியிருக்கிறீர்களே, என்ன பேசப் போகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் கருணாநிதி, இப்போதே அதைச் சொல்லிவிட்டால் பிறகு எதற்காக 18ஆம் தேதி கூட்டம்? இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து விரிவாக கலந்து பேசுவோம் என்று தெரிவித்தார்.