த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌சிற‌ப்பு‌க்கு சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

சனி, 12 ஏப்ரல் 2008 (12:46 IST)
திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும் எ‌ன்று அர‌சி‌ய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் வா‌‌ழ்‌த்து செ‌ய்த‌ி கூ‌றியு‌ள்ளன‌ர்.

ஜெயல‌லிதா (அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர்) : சித்திரைத் திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் சுடர்விட்டு பிரகாசிக்கவும், ஏழை எளிய மக்கள் இன்புற வாழவும், தம் மக்களின் நலனுக்காக தமிழக மக்களின் நலன்களை தாரை வார்க்கும் சுயநலவாதிகளும், துரோகிகளும் கூனிக்குறுகிடவும், ஆணவமும், ஆடம்பரமும், வீண் ஆரவாரமும் அடங்கி ஒடுங்கிடவும், உண்மையான மக்களாட்சியின் உன்னதத் தன்மைகள் மீண்டும் மலர்ந்து மணம் வீசிடவும் இந்த நன்னாளில் சூளுரைப்போம்.

தமிழக மக்களை தற்போது வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற துன்பங்களும், துயரங்களும் அறவே நீங்கி அமைதியும், ஆனந்தமும், குதூகுலமும் சரிவதாரி ஆண்டில் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அனைத்துத் தமிழர்களுக்கும் எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உவகையுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்) : மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது.

தமிழர் வாழ்வோடும், வரலாறோடும் பின்னிப் பிணைந்த சித்திரையின் மாட்சிக்கு எத்தனையோ சாட்சியங்களை இலக்கியங்கள் கொண் டுள்ளன. இந்திர விழா, வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி களித்தது இச்சித்திரைத் திருநாளில்தான்.

திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும். ம.தி.மு.க. சார்பில் தமிழ்ப் பெரு மக்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

திருநாவு‌க்கரச‌ர் (ா.ஜ.க. முன்னாள் மத்திய அமை‌ச்ச‌ர்) : இப்புத்தாண்டில் மக்களின் வாழ்வில் வறுமையும், அறியாமையும் அகன்று அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன்.

ஆ‌ர்.எ‌ம்.‌வீர‌ப்ப‌ன் (எம்.ஜி.ஆர். கழக தலைவர்) : தை முதல்நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு தொடக்க நாள் என்றாலும் நீண்ட காலமாக தமிழ் மக்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். சித்திரை பிறக்கிற நாளன்று, இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 வ‌ிழு‌க்காடமத்திய அரசின் கல்வி நிலையங்களில் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. வருகிற ஆண்டுகள் தை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டாகத் தொடங்கும் என்று எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

மரு‌த்துவ‌ரசேதுராம‌ன் (அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர்) : தமிழ் ஆண்டாக தைத் திங்கள் முதல் நாளை அரசு ஒருபுறம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் இதனை தமிழ் ஆண்டாக அல்லாமல் சர்வாதாரி ஆண்டாக வரவேற்கலாம். ஏறத்தாழ தமிழ் வருடப் பிறப்பாகவே தமிழ் மக்களின் மனதில் பல்லாண்டு காலமாகப் பதிந்து விட்ட இந்த சித்திரையில் பிறக்கும் ஆண்டுகள் தமிழர்களின் பண்பாட்டை முழக்கும் ஆண்டுகளாக பவனி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்