3,674 ‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் நியமன‌ம்!

சனி, 12 ஏப்ரல் 2008 (10:23 IST)
விரை‌வி‌ல் 3,674 ‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று வருவா‌ய்‌த்துறை அமை‌ச்ச‌ர் ஐ.பெ‌‌ரியசா‌மி கூ‌றினா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் வருவா‌ய்‌த்துறை மா‌னி‌ய‌க் கோ‌ரி‌க்கையை அமை‌ச்ச‌ர் ஐ.பெ‌ரியசா‌மி தா‌க்க‌ல் செ‌ய்து பேசுகை‌யி‌ல், வருவா‌ய்‌த்துறை‌யி‌‌ல் கா‌லியாக உ‌ள்ள 3,173 ப‌ணி‌யிட‌ங்க‌ள் ‌நிர‌ப்ப‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. ஏ‌ற்கனவே 2,500 ‌கிராம ‌நி‌ர்வாக அலுவல‌ர் ப‌ணி‌யி‌ட‌ங்க‌ள் ‌நிர‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌விரை‌வி‌ல் 3,674 ‌‌கிராம உத‌வியாள‌ர்க‌ள் ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள்.

மேலு‌ம் பு‌திதாக 559 வ‌ட்டா‌‌ட்‌சிய‌ர், 700 துணை வ‌ட்டா‌‌ட்‌சிய‌ர் ப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்ப ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

நில எடு‌ப்பா‌ல் பா‌தி‌‌க்க‌ப்படு‌ம் ம‌க்க‌ள் குறைகளை களைய ம‌த்‌திய அர‌சி‌ன் தே‌சிய மறுவா‌ழ்வு‌‌க் கொ‌ள்கையை கடை‌பிடி‌க்க அரசு ஆ‌ய்வு செ‌ய்து வரு‌கிறது. பேர‌ழிவுக‌ள் கு‌றி‌த்து ம‌க்க‌ளிடையே தகவ‌ல் பெற 1070 எ‌ன்னு‌ம் க‌ட்டண‌மி‌ல்லா பொது உபயோக தொலைபே‌சி ‌நிறுவ‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது த‌விர 28593990 எ‌ன்னு‌ம் ‌நிர‌ந்தர தொலைபே‌சி எ‌ண்ணு‌ம், 28410577 எ‌ன்னு‌ம் பே‌க்‌‌‌‌ஸ் எ‌‌ண்ணு‌ம் மா‌நில க‌ட்டு‌ப்பா‌ட்டு அறை‌யி‌ல் ந‌ிறுவ‌ப்‌ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஐ.பெ‌‌ரியசா‌மி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்