பொருளாதாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு: வைகோ!

வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (16:22 IST)
பொருளாதார‌த்த‌ி‌ல் மு‌ன்னே‌றிய ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோரு‌க்கு‌ம் இட ஒது‌க்‌கீடு வழ‌ங்‌கிட ம‌‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கைக‌ள் எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் 93வது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

ஆனால், அதே நேரத்தில் பி‌ற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் முன்னேறியோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையையே தகர்த்து விடும்.

எனவே மத்திய அரசு இதனைக் கருத்தில் கொண்டு சமூகநீதியை முழுமையாக நிலைநாட்டிடவும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படவும் தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று வைகோ வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்