சித்ரா பவுர்ணமி அ‌ன்று ‌‌‌‌வீடுக‌ளி‌ல் தீபம் ஏற்றுங்கள்: ஜெயலலிதா!

சி‌த்ரா பவு‌ர்ண‌மி நாளான வரு‌ம் ச‌னி‌க்‌கிழமை அ‌ன்று த‌‌மிழக‌ம் முழுவது‌ம் அவரவ‌ர் ‌வீடுக‌ளி‌ல் ‌தீப‌ங்க‌ள் ஏ‌ற்‌றி கோடி‌க்கண‌க்கான ‌விள‌க்குகளை ஒ‌ளிர‌ச் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அ.இ.அ.தி.மு.க.வில் உறுப்பின ராக உள்ள ஒவ்வொருவரும், அண்மை காலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையில் இணைந்துள்ளவர்கள் உட்பட அனைவரும், வரும் (சனிக் கிழமை) சித்ரா பவுர்ணமி நாளன்று மாலை சரியாக 6.30 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அவரவர் இல்லங்களிலும்,

வீட்டு வாசல்களிலும் தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும், வர்த்தக கட்டிடங்களிலும், கோவில்களிலும், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குடும்பத்தோடு அல்லது சக ஊழியர்களோடு, தனியாகவோ அல்லது கூட் டாகவோ விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்றி வைக்கும் விளக்கு, குத்து விளக்காகவும் இருக்கலாம், காமாட்சி விளக்காகவும் இருக்கலாம், சாதாரண அகல் விளக்காகவும் இருக்கலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப 19ஆ‌ம் தே‌திய‌ன்று மாலை 6.30 மணிக்கு தமிழகம் முழுவதும் தீபங்கள் ஏற்றி, கோடிக்கணக்கான விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்