‌நீ‌திம‌ன்ற வழ‌க்கு முடி‌ந்த ‌பிறகு கூ‌ட்டுறவு‌த் தே‌ர்த‌ல்: கோ.‌சி.ம‌ணி அ‌றி‌வி‌ப்பு!

புதன், 9 ஏப்ரல் 2008 (18:28 IST)
கூ‌‌ட்டுறவு‌ச் ச‌ங்க‌த் தே‌ர்த‌ல் கு‌றி‌த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் உ‌ள்ள வழ‌க்கு முடி‌ந்த ‌பிறகு தே‌ர்த‌ல்க‌ள் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக‌க் கூ‌ட்டுறவு அமை‌ச்ச‌ர் கோ.‌சி.ம‌ணி ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று கூ‌ட்டுறவு‌த் துறை மா‌னிய‌க் கோ‌ரி‌க்கை ‌மீதான ‌விவாத‌த்‌தி‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌‌த்த அமை‌ச்ச‌ர் கோ.‌சி.ம‌ணி, "கூட்டுறவு‌ச் ச‌ங்க‌த் தேர்தல் குறித்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு இருக்கிறது. இந்த வழக்கு முடிந்த பின்னர் கூட்டுறவு சங்க‌த் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" எ‌ன்றா‌ர். மேலு‌ம் அவ‌ர் கூ‌றியதாவது:

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததையொட்டி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3,304 கோடியே 42 லட்ச‌த்தை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அரசு விடுவித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மீதமுள்ள தொகையையும் உறுதி அளித்தபடி விடுவிக்க உள்ளது.

நடப்பு ஆண்டில் ரூ.1,500 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இ‌தி‌ல் இதுவரை கடன் பெறாத 30 ‌விழு‌க்காடு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு லட்சம் விவசாயிகளை 10 ஆயிரம் சுய உத‌வி‌க் குழுக்களாக உருவாக்கி அதன் மூலம் ரூ.10 கோடி சுழல் நிதியுதவி வழங்கப்படும். கூட்டுறவு அமைப்புகள் மூலம் மட்டும் ரூ.100 கோடி
அளவிற்கு தானிய ஈட்டுக்கடன் வழங்கப்படும்.

குறுகியகால, நீண்டகால கடன் கட்டமைப்புகள் நலிவுற்ற நிலையில் உள்ளதால் அவற்றைச் சீரமைக்க வைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய கால மற்றும் நீண்டகால கூட்டுறவு கடன் பெறுவது குறித்து திட்டம் தயாரிக்க தொழில்நுட்ப ஆலோசனை மையம் சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ஏற்படுத்தப்படும்.

தொட‌க்க‌க் கூ‌ட்டுறவு வ‌ங்‌கிக‌ள் க‌ணி‌ணிமய‌ம்!

2008-ம் ஆண்டிலேயே அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வங்கிகள் முழுமையாக கணினி மயமாக்கப்படும். இதற்கென மென்பொருளுக்கு ரூ.2 கோடி செலவிடப்படும். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் ரூ.35 லட்சம் செலவில் கணினி மயமாக்கப்படும்.

நலிவடைந்த நிலையில் உள்ள 1,192 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை புத்துயிரூட்டுவதற்கு ஒவ்வொரு வங்கிக்கும் ரூ.20 லட்சம் சிறப்பு காசுக் கடன் சலுகை வட்டி வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவற்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட வழிவகுக்கப்பட்டு உள்ளது. 100 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் பயிர் மருத்துவ மையங்களாக மாற்றி பல்வேறு வகைப்பட்ட பயன்பாட்டு மையங்களாக்கப்படும்.

கடந்த ஆட்சியில் 199 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை கலைத்திட அறிவிப்பு வழங்கப்பட்டது. அவற்றுக்கு புத்துயிரூட்ட நடவடிக்கைகள் எடுத்ததன் பலனக அவற்றில் 197 வங்கிகள் செயல்படத் தொடங்கி அவற்றின் மூலம் 2 ஆண்டுகளில் ரூ.30 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதி 2 வங்கிகளையும் புத்துயிரூட்ட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் உர‌த் த‌ட்டு‌ப்பாடு இ‌ல்லை!

இந்தியா முழுவதும் உரத் தட்டுப்பாடு இருந்த நிலையிலும் தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. கூட்டுறவுத் துறை மூலம் ரூ.213 கோடியே 50 லட்சத்துக்கு உரங்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வைப்புத் தொகை முதிர்வடைந்தும் திரும்ப வழங்கவில்லை என்று பலரும் தெரிவித்தனர். முதிர்வடைந்து திருப்பித் தரப்படாத வைப்புத் தொகை நிலுவை 30.6.2006 அன்று ரூ.170 கோடியே 62 லட்சமாக இருந்தது. இந்த அரசு எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ரூ.136 கோடியே 84 லட்சம் திரும்ப வழங்கப்பட்டுவிட்டன. மேலும் மீதமுள்ள ரூ.33.78 கோடி விரைவில் வழங்கப்படும். இதன்காரணமாக கூட்டுறவு வங்கிகளில் ரூ.14,963 கோடியாக இருந்த டெபாசிட் ரூ.17,377 கோடியாக அதிகரித்துள்ளது.

கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு மின்னணு எடை இயந்திரங்கள் வழங்குவதற்காக அரசு ரூ.11 கோடியே 50 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து கூட்டுறவு ரேஷன் கடைகளும் மின்னணு எடை இயந்திரங்களுடன் செயல்படும்.

கூ‌ட்டுறவு வ‌ங்‌கிக‌ளி‌ல் முறைகே‌ட்டை தடு‌க்க நடவடி‌க்கை!

தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர்கள் தவறு செய்தால் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறினார்கள். இடமாற்றம் செய்வதைவிட தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 170 பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 137 பேரை கைது செய்துள்ளோம். எதிர்காலத்தில் முறைகேடு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். பண்ணை சாரா கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது. அபராத வட்டியை தள்ளுபடி செய்திருக்கிறோம். கால அவகாசம் நீட்டிப்பு தருகிறோம்.

நடப்பு ஆண்டில் புதியதாக திருநெல்வேலி, கரூர், நாகப்பட்டினம், வேலூர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு இந்த ஆண்டு ரூ.4 கோடி மதிப்பில் கட்டிடம் கட்டப்படும்.

26 கூட்டுறவு அச்சகங்கள் ரூ.3 கோடியில் நவீனமயமாக்கப்படும். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்திலும், தஞ்சை மாவட்டம் மன்னார்குடியிலும் சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும். 500 கூட்டுறவு ரேஷன் கடைகளை தேர்ந்தெடுத்து சிறு பல்பொருள் அங்காடிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி சிந்தாமணி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வைப்புதாரர்கள் வைப்புத் தொகையினை திரும்ப பெற நிலுவைத் தொகை ரூ.5 கோடி வட்டியில்லா கடனாக அந்த பண்டகசாலைக்கு வழங்கப்படும். பொதுமக்களுக்கு வைப்புத் தொகை முழுவதும் திரும்ப வழங்கப்படும்.

சென்னையில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரையில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையம் ஆகியவை தேசிய தொழில் நுட்பக் கல்வி கழகத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு முதல் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு தொடங்கப்படும்.

இவ்வாறு அமை‌ச்ச‌ர் கோ.சி.மணி கூறினார்

வெப்துனியாவைப் படிக்கவும்