த‌மிழக‌த்‌தி‌ல் பேரு‌ந்துக‌ள் த‌னியா‌ர்மய‌ம் ஆகாது: முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு!

புதன், 9 ஏப்ரல் 2008 (17:13 IST)
த‌மிழக‌த்‌தி‌லபேரு‌ந்து‌‌பபோ‌க்குவர‌த்தத‌னியா‌ர்மய‌மஆகாதஎ‌ன்றச‌ட்ட‌பபேரவை‌யி‌லமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்தா‌ர்.

ச‌ட்ட‌பபேர‌வை‌யி‌லஇ‌ன்று ‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம் அ.இ.அ.‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லபேரு‌ந்தபோ‌க்குவர‌த்து‌தத‌னியா‌ர்மய‌மதொட‌ர்பாக‌ககடு‌ம் ‌விவாத‌மநட‌ந்தது.

இ‌ந்‌த ‌விவாத‌த்தமுடி‌‌‌க்கு‌மவகை‌யி‌லகுறு‌க்‌கி‌ட்முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியதாவது:

ஏற்கனவே, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 100 மைல் செல்கின்ற நீண்ட தூர பேருந்துகளை மாத்திரம் அன்றைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் தேசியமயமாக்கினார்.

அதற்குப் பிறகு பேரறிஞர் அண்ணா ஆட்சி வந்த பிறகு நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து பிறகு துரதிருஷ்டவசமாக நம்முடைய பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு -அது கூட துரதிருஷ்டவசமாக இருக்கலாம் -நான் முதலமைச்சராக ஆன பிறகு கொண்டு வந்தது தான் பேருந்துகளை தேசியமயமாக்குகின்ற இந்தத் திட்டமாகும்.

அப்படி ஆக்கும் பொழுது டி.வி.எஸ்.காரர்களே முன் வந்து நாங்கள் பேருந்துகளை எல்லாம் தேசியமயமாக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் என்று கூறினார்கள்.

பொள்ளாச்சி மகாலிங்கம், அவர்களுடைய பேருந்துகளையும் தேசியமயமாக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் என்று சொன்னார்கள். குடந்தை ராமன் அன்ட் ராமன் அவர்களும் சொன்னார்கள்.

பொறையாறு பேருந்து ஓனர்களும் அப்படி ஒத்துக் கொண்டு அவர்களாகவே வந்து, நாம் நடத்திய பேருந்துகளை தேசியமயமாக்குகின்ற ஒவ்வொரு விழாக்களிலும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே, யாரையும் புண்படுத்தாமல், யாரையும் நஷ்டமடைவதற்கு ஆளாக்காமல் சுமூகமான முறையில் நடைபெற்ற தேசியமயமாக்கல் கொள்கையின் வெற்றிதான் அன்றைக்கு முதன்முதலாக நாம் பேருந்துகளை தேசியமயமாக்கும் பொழுது நடைபெற்றது. அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடையிடையே, சில பேர் வதந்திகளைப் பரப்பியிருக்கலாம் -இதை மீண்டும் தேசியமயத்திலிருந்து தனியார் மயத்திற்கு கொண்டு போகிறார்கள் என்று. ஆனால், இருந்த எதிர்க்கட்சிகள் யாரும் அதற்கு இடம் தரவில்லை. அந்தக் காரணத்தினால், ஒரு நல்ல புரட்சிகரமான முடிவு எடுத்த பிறகு அதிலிருந்து கீழ் நோக்கிப் போவதற்கு எந்த அரசும் முன் வராது.

அதன் தொடர்ச்சிதான் இன்றளவும் இந்தப் பேருந்து போக்குவரத்துத் தொழில் பொதுவுடமைத் தொழிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை நாம் மறந்து விடக் கூடாது. பதினான்கு அல்லது பதினைந்து போக்குவரத்துக்களை ஒரே நிலையிலே கொண்டு வந்து ஒரே நிறுவனமாக ஆக்கி போக்குவரத்துக் கழகம் என்ற ஒரு துறையை ஏற்படுத்தியது தி.மு.க.அரசு என்பதையும் மறந்து விடக் கூடாது.

இ‌வ்வாறமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்