தமிழ்நாட்டில் மேலும் 22 தொழிற்பேட்டைகள் சிட்கோ நிறுவனம் மூலம் தொடங்கப்படும் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, “1970 ஆம் ஆண்டும் சிட்கோ நிறுவனத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கினார். இந்நிறுவனம் இதுவரையில் 78 தொழிற்பேட்டைகளை அமைத்துள்ளது. இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திட மேலும் 22 தொழிற்பேட்டைகள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும்” என்றார்.