இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் மே 5, 16, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற தொண்டர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 9, 10 ஆகிய 2 நாட்கள் தலைமை கழகத்தில் வழங்கப்படும்.
அ.இ.அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் தொண்டர்கள், கட்டணத் தொகையான ரூ.5 ஆயிரம் தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.