பா.ம.க. ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தா‌ல் பூரண மது‌வில‌க்கு அம‌ல்: ராமதா‌ஸ்!

ஞாயிறு, 30 மார்ச் 2008 (18:12 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் பா.ம.க. ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தா‌ல் பூரண மது‌வில‌க்கு அம‌ல்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்து கோவை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றியதாவது:

பூரண மது‌வில‌க்கை அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று கட‌ந்த 10 ஆ‌ண்டுகளாக‌ப் போராடி வரு‌கிறோ‌ம். த‌ற்போது மது‌வினா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள் அ‌திகமாக உ‌ள்ள காரண‌த்தா‌ல் எ‌ங்க‌ள் கோ‌ரி‌க்கையை ‌தீ‌விரமாக ‌வ‌லியுறு‌த்‌தி வரு‌கிறோ‌ம்.

சட்டமன்றத்தில் ஒரு அமைச்சர் பேசும்போது "மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்புமணியிடம் பேசி, அவர் பிரதமர், சோனியா காந்தி ஆகியோரிடம் பேசி இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வர முயற்சித்தால் தமிழ்நாடு அரசும் ஏற்கும்" என்று சொல்லியுள்ளார்.

இன்னொரு அமைச்சர் பேசும்போது, ஏதோ நாங்கள்தான் மதுக்கடைகளை திறந்து குடிகாரர்களை உருவாக்கி விட்டதுபோல் எங்களை‌க் கு‌ற்ற‌ம்சா‌‌‌ற்‌றினா‌ர்.

இந்த இரு அமைச்சர்களும் மதுவிலக்கு பற்றிய சரித்திரம் தெரியும் என்பதுபோல் பேசுகிறார்கள்.

மதுவிலக்கு மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்டது. அரசியல் சட்டம் 47-வது பிரிவின் கீழ் இது வருகிறது. அதனால்தான் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டும் வந்துள்ளது.

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டு வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அ‌ங்கு மது இ‌ல்லாமலே ஆண்டுக்கு ரூ. 7 ஆயிரத்து 411 கோடி வருமான‌ம் வருகிறது என்று கூறுகிறார்கள். இது ரூ. 10 ஆயிரம் கோடியாக உயரு‌ம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலு‌ம், ஆந்திரா, மிஜோராம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மது‌வில‌க்கு அமுல்படுத்தப்பட்ட வரலாறும் உண்டு.

தமிழ்நாட்டில் 1971 வரை பூரண மதுவிலக்கு அமு‌லி‌ல் இ‌ரு‌ந்து‌ள்ளது. அதன் பிறகு அதை தளர்த்தியது தி.மு.க. அரசுதான். சென்னையில் காலை 9 மணிக்கெல்லாம் மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இது ஒரு வகையில் மனித உரிமை மீறலாகும்.

எனவே மதுவிலக்கை பொறுத்தவரை தமிழக அரசின் கொள்கை என்ன, தி.மு.க.வின் கொள்கை என்ன, தமிழக முதலமைச்சரின் கொள்கை என்ன என்பதை தெளிவுப்படுத்த வே‌ண்டு‌ம்.

2011-ல் மக்கள் ஆதரவோடு நாங்கள் ஆட்சி அமைப்போம். அது கூட்டணி ஆட்சியாக இருக்கும். நா‌ங்க‌ள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவதுதான். ஒரு துளி கள்ளச்சாராயம் கூட இரு‌க்க விடமாட்டோம்.

இ‌வ்வாறு ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்