சொத்து வரியை உயர்த்தியவ‌ர் ஜெயலலிதா : கருணாநிதி!

சனி, 29 மார்ச் 2008 (15:12 IST)
சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று அறிக்கை விடுகின்ற இதே ஜெயலலிதா, அவரது ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் நூறு முத‌ல் 200 வ‌ிழு‌க்காடு வரை சொ‌த்து வ‌ரியை உய‌ர்‌த்‌தி கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று ஆணை ‌பிற‌ப்‌பி‌த்தவ‌ர் இ‌ன்று சொ‌த்து வ‌ரியை உய‌ர்‌த்தலாமா எ‌ன்று கூறு‌கிறா‌ர் என முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கே‌ள்‌வி எழு‌ப்‌‌‌பியு‌ள்ளா‌ர்.

முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அ‌றி‌க்கை‌யி‌ல், எதற்கெடுத்தாலும் போராடுவேன்'' என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறாரே?

"காலையில் கைது - மாலையில் விடுதலை'' என்ற நிலை தொடரும் வரையில் இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டக் குரல் கேட்டுக் கொண்டு தானிருக்கும்.

1.4.2008 முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சொத்துவரி மாற்றி அமைக்கப்பட வேண்டுமென்று அரசு ஆணையிட்டுள்ளதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

சொத்து வரி என்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்ப டையான வருவாய் ஆதா ரங்களில் ஒன்றாகும். பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் சொத்து வரியை சீரமைக்க வேண்டுமென்று முடிவெடுத்து, வழிகாட்டி நெறிமுறைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று அறிக்கை விடுகின்ற இதே ஜெயலலிதா தான், அவர் ஆட்சியிலே இருந்தபோது 1993-ஆம் ஆண்டில் குடியிருக்கும் கட்டிடங்களுக்கு 100 சதவிகி தத்திற்கு மிகாமலும், தொழில் மற்றும் வணிக உபயோகக் கட்டிடங்களுக்கு 150 சதவிகிதத்திலிருந்து 200 சதவிகிதத்திற்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தார். அதனை அப்படியே மறந்து விட்டு, தற்போது சொத்து வரியை உயர்த்தலாமா என்கிறார் ஜெயலலிதா.

82ஐ 84 வாழ்த்துகிறது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக நான்காவது முறையாக தோழர் ஏ.பி.பரதன், நீண்ட அனுபவமும் நேர்மையான செயல்பாடும் அந்தக்கட்சியை கட்டிக் காத்திடும் கேடயங்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்த நேரத்திலும் கூட, அதனை வெல்லக்கூடிய ஆற்றலாளர். அந்த 82ஐ இந்த 84 வாழ்த்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்