தமிழகத்தில் இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல் ஆக‌ஸ்‌ட் 31ஆ‌ம் தேதி வெளி‌யீடு: கோபாலசா‌மி!

சனி, 29 மார்ச் 2008 (10:40 IST)
''தமிழகத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 234 தொகுதிகளுக்கான இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியலஆகஸ்‌ட் 31ஆ‌ம் தேதி வெளியிடப்படும்'' என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளும‌ன்ற, ச‌ட்ட‌ம‌ன்ற தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு உள்ளன. பழைய தொகுதிகள், புதிய தொகுதிகளை ஒப்பிட்டுப் பார்த்து, அனைத்து வாக்குச்சாவடிகளும் சரிவர ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதா சரிபார்க்கப்படும்.

அந்தந்த தொகுதிகளுக்கான புதிய புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ூலை 1ஆ‌ம் தேதி வெளியிடப்படும். அப்போது புகைப்பட வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதாவது ஆட்சேபணை இருந்தா‌ல் தெரிவிக்கலாம்.

இதை‌த் தொட‌ர்‌ந்து தமிழகம் உள்பட நாடு முழுவதும், மறுசீரமைப்பு செய்யப்பட்ட தொகுதிகளுக்கான புதிய புகைப்பட வாக்காளர் பட்டியல் ஆக‌‌‌ஸ்‌ட் 31ஆ‌ம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.

கர்நாடக‌த்‌தி‌ல் மே 28‌க்கு‌ள் தே‌ர்த‌ல்!

கர்நாடக மாநிலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட தொகுதிகளுக்கான புதிய புகைப்பட வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. மே 28ஆ‌‌ம் தேதிக்குள் அ‌ங்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளோ‌ம்.

தமிழகத்தில் புதிய தொகுதிகளில் வாக்குச் சாவடிகளை சரிபார்க்கும் பணி அடுத்த மாதம் முடிவடைந்ததும், மே அ‌ல்லது ஜூன் மாதங்களில் புதிய தொகுதிகளுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ூலை 1ஆ‌ம் தேதி வெளியிடப்படும்.

இந்தப் பட்டியல் தொடர்பாக ூலை மற்றும் ஆகஸ்‌ட் மாதங்களில் ஆட்சேபணையோ, ஆலோசனையோ தெரிவிக்கலாம். ஆகஸ்டு 31ஆ‌ம் தேதி புதிய தொகுதிகளுக்கான இறுதி புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.

1-1-2008 தேதியை அடிப்படையாகக் கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளராக பதிவு செய்யலாம். இனிமேல் நடைபெறும் எந்தப் பொதுத் தேர்தலானாலும் புதிய தொகுதிகளின் அடிப்படையில்தான் நடைபெறும்.

ஆகஸ்டு 31ஆ‌ம் தேதிக்குப் பிறகு எந்தத் தேதியில் நாடாளும‌ன்ற தேர்தல் நடத்தினாலும் தேர்தல் நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தயாராக இருக்கும் எ‌ன்று கோபாலசாமி கூறினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்