தமிழக புதிய டி.ஜி.பி. கே.பி.ஜெயின்!

சனி, 29 மார்ச் 2008 (10:40 IST)
webdunia photoFILE
த‌மிழக காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குனராக இரு‌ந்த ராஜே‌ந்‌திர‌ன் ஓ‌ய்வு பெறுவதையொ‌ட்டி பு‌திய இய‌‌க்குனராக கே.பி.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குனராக இ‌ரு‌ந்த ராஜேந்திரன் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆ‌ம் தேதி ஓய்வு பெற்றார். ஆனால், அரசு அவருக்கு மேலும் 3 மாத காலம் பதவி நீட்டிப்பு வழங்கியது. பதவி நீட்டிப்பு காலம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே பதவியிலிருந்து ராஜ‌ே‌ந்‌திர‌ன் ஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில் புதிய காவ‌ல்துறை தலைமை இய‌‌க்குனராக கே.‌பி.ஜெ‌யி‌னை ‌நிய‌மி‌த்து இத‌ற்கான ஆணையை உள்துறை செயலாளர் மாலதி நே‌ற்று வெளியிட்டார். இவர், தற்போது தமிழ்நாடு காவ‌ல்துறை வீட்டு வசதி கழக தலைவராக உள்ளார்.

கே.பி.ஜெயின் வருகிற திங்கட்கிழமை பிற்பகலில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடை பெறும் தலைமை இய‌‌க்குனரு‌க்கு ராஜேந்திரனுக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதான‌த்‌தி‌ல் வழியனுப்பு விழா அன்றைய தினம் மாலையில் நடைபெறும் என்று தெ‌ரி‌கிறது.

கே.பி.ஜெயின் உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் 4.4.1950-ல் பிறந்தார். வழ‌க்க‌றிஞரு‌க்கு படித்துள்ள இவர், 1971ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். தமிழக காவ‌ல் துறையில் பல்வேறு பதவிகளில் திறம்பட சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

மத்திய உளவுப் பிரிவில் இணை இயக்குனராகப் பணியாற்றி தனி முத்திரை பதித்தவர். தற்போது தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி கழகத்தின் தலைவராக பணியாற்றும் இவர், இங்கும் பல்வேறு கட்டிடங்களைக் கட்டி அனைவரும் பாராட்டும்படி செயல்பட்டுள்ளார்.

இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பாகப் பேசக் கூடிய திறமை வாய்ந்த இவர், தமிழில் பேசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். இவர் டி.ஜி.பி.யாகும் வாய்ப்பு இருந்ததால், கடந்த ஒரு மாதமாக தமிழ் ஆசிரியர் ஒருவரை விசேஷமாக நியமித்து தமிழ் கற்று வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்