ஈழ‌த் த‌மிழர்களு‌க்காக நா‌ங்க‌ள் ‌விலை கொடு‌க்க தயா‌ர்: ராமதா‌ஸ்!

வெள்ளி, 28 மார்ச் 2008 (10:25 IST)
''ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்காக நா‌ங்க‌ள் ‌விலை கொடு‌க்க தயாராக இரு‌க்‌கிறோ‌ம்'' எ‌ன்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்து தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெ‌ற்ற ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்ட பா.ம.க. நிறுவனரும், தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் காப்பாளருமான மரு‌த்துவ‌ர் ராமதாஸ் பே‌சியதாவது:

கோபத்தோடும், கொந்தளிப்போடும் எங்களுடைய உணர்வுகளை ஒட்டுமொத்தமாக 6.2 கோடி தமிழ் மக்கள் உணர்வுகளை நாங்கள் இங்கே வெளிப்படுத்துகிறோம். இந்திய அரசு இலங்கை தொடர்பான தனது வெளிநாட்டு கொள்கையை மாற்றி கொண்டு இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தோம்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும், இலங்கைக்கு ஆயுதம் வழங்க கூடாது என்றும் வலியுறுத்தினோம். ஆனால் இன்று வரை நிலைமை மாறவில்லை. இப்போது நிலைமை மாறும் சூழல் வந்திருக்கிறது. இந்த நேரத்தில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும். தமிழக அரசு விழித்து கொள்ள வேண்டும். உறக்கத்தை கலைக்க வேண்டும்.

ஏன் என்றால், ஒரு தேசிய கட்சியே இந்தளவுக்கு தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இது சரியான தருணம். நழுவ விடக்கூடாது. இதற்காக எந்த விலையும் கொடுக்க தேவையில்லை. நாங்கள் விலை கொடுக்க தயார். தமிழக அரசே அந்த தீர்மானத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றி தேவைப்பட்டால் இங்கிருந்து அனைத்து கட்சிகள் சார்பாக பிரதிநிதிகளை டெல்லிக்கு அனுப்பி பிரதமரை சந்தித்து இதற்கான ஒரு தீர்வை விரைவிலே காண்போம் என்று தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகை‌யி‌ல், தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின்படி தமிழர் வாழும் பகுதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களாக பிரிக்க கூடாது. தமிழர் வாழும் பகுதியை வடக்கு கிழக்கு மாகாணமாக பிரிக்க கூடாது என்று முதலமைச்சர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எ‌ன்றா‌ர் திருமாவளவன்.

வெப்துனியாவைப் படிக்கவும்